காரைதீவில்,கடல் வந்தது ஊருக்குள்!

பாறுக் ஷிஹான்


அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தில் கடல் சீற்றத்தின் காரணமாக 100 மீட்டர் தாண்டி ஊருக்குள் புகுந்த கடல் நீர் புகுந்துள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு சென்று காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்      சக  பிரதேச சபை உறுப்பினர்களும் பார்வையிட்டுள்ளனர்.

குறிப்பாக கடலோர வீதியை தாண்டி ஊருக்குள் கடல்நீர் செவ்வாய்க்கிழமை(19) முற்பகல்  உட்புகுந்துள்ளது. இதனால் மீனவர்களின் வலைகள்    தோணிகள்  என்பன காரணமாக 100 மீற்றர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டு கிடந்தன.இதனை காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்      சக  பிரதேச சபை உறுப்பினர்களும் கேள்வியுற்று சம்பவ இடத்திற்கு சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டு  சேதமடைந்த இடங்களை பார்வையிட்டனர்.

அத்துடன் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டனர்.குறித்த பிரதேசத்தில் கடல் நீர் ஊருக்குள் புகுந்து பள்ளமான இடத்தில் தேங்கி காணப்படுவதுடன்  கடலிலிருந்து 65 மீற்றர் அப்பால் போடப்பட்டுள்ள எல்லை கல்லிற்கு அருகில் வரை கடல் மட்டம் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement