இலங்கையில் கொரோனா வைரஸ் (COVID19) தொற்று நிலைமையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வர்த்தக மற்றும் வியாபார நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான கால எல்லை எதிர்வரும் 2020 மே மாதம் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நீடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர தெரிவித்தார்
தமது நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக வர்த்தக சமூகத்தினர் சாதகமாக பதில்களை அளித்துவருவதினால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்
இதற்கமைவாக பின்வரும் இணையதள இணைப்பினூடாக மேலதிக தகவல்களை பெற்று வர்த்தக மற்றும் வியாபார நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


Post a Comment
Post a Comment