சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு


தமிழ்நாட்டில் ஆன்- லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலின் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள் திறப்பது தாமதமாகிவரும் நிலையில், ஆன்லைன் வகுப்புகளை பல்வேறு தனியார் பள்ளிக்கூடங்கள் நடத்திவருகின்றன.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் ஆன் லைன் வகுப்புகளைத் தடைசெய்ய வேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், "ஆன்-லைனில் மாணவர்கள் கல்வி கற்கும்போது ஆபாச இணையதளங்களும் குறுக்கிடுகின்றன. இதனால் கவனச்சிதறல் ஏற்படுகிறது. மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இது போன்ற இணையதளங்கள் குறுக்கிடாத வகையில் சட்டங்களை வகுக்கவேண்டும். அதுவரை ஆன்-லைன் வகுப்புகளை நடத்தத் தடை விதிக்க வேண்டும்" அந்த மனுவில் கூறியிருந்தார்.

இது தவிர, தமிழ்நாட்டில் தற்போது 8 சதவீத வீடுகளில் மட்டுமே இணைய இணைப்புடன்கூடிய கம்ப்யூட்டர்கள் உள்ளன. இதன் காரணமாக, ஆன் - லைன் வகுப்புகளை கிராமப்புற மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை உள்ளது என்பதும் அவரது மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. கிராமம் - நகரம், ஏழை - பணக்காரர் என கல்வி கற்பதில் சமமற்ற தன்மை ஏற்படுவதாகவும் தனது மனுவில் சரண்யா கூறியிருந்தார்.


இந்த மனு மீதான இன்று வினீத் கோத்தார், சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எவ்வித விதிமுறைகளும் இல்லாமல் ஆன் - லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாக வாதிட்டார்.

இதற்கென விதிமுறைகள் ஏதேனும் உள்ளதா என நீதிபதிகள் அரசுத் தரப்பிடம் கேள்வியெழுப்பினர். தமிழ்நாட்டில் கல்விக்கென தனியாக சேனல் வைத்திருப்பதாகவும் கொரோனா தொற்றின் காரணமாகவே ஆன் - லைன் வகுப்புகளை பள்ளிகள் நடத்திவருவதாகவும் இது நிரந்தரமாக இருக்காது என்றும் கூறினார்.

இதையடுத்து, ஆன் - லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், இதுபோல ஆன் - லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்த ஏதாவது வழிமுறைகள் உள்ளதா என பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்த