வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டம்


வி.சுகிர்தகுமார்
  

  திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வாழும்  குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் செயற்பாடானது கனடாவில் வசிப்பவரும் யாழ் மல்லாவி தொழிநுட்ப கலை கலாசார மற்றும் பெண்கள் மேம்பாட்டு செயற்பாட்டாளருமான கா.யோகநாதன் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

மனிதாபிமான செயற்பாட்டாளரும் நிதி அனுசரணையாளருமான மனிதநேயன் சஜிராஜ் நடாவின் நிதிப்பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட மாவட்டத்திற்கு இரண்டு எனும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் இன்று ஒரு இலட்சம் பெறுமதியான கால்நடைகள் தங்கவேலாயுதபுரத்தை சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு வழங்கி வைக்கப்பட்டன.

அத்தோடு தம்பட்டையை சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு ஒரு இலட்சம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கனடாவைச் சேர்ந்த கா.யோகநாதன்; குழவினரது சார்பில் அம்பாரை மாவட்ட மனிதாபிமான குழுமத்தின் தொடர்பாளரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான தி.சின்னத்தம்பி கலந்து கொண்டதுடன் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா, கிராம சேவை உத்தியோகத்தர் உத்தியோகத்தர் சுதர்சன்; பொருhளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் புவன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


குறித்த குடும்பங்களின் அவல நிலை தொடர்பில் கருத்திற் கொண்ட பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் மேற்கொண்ட முயற்சியின் பயனாகவும் சிபாரிசிக்கு அமைவாகவும் வாழ்வாதார பொருட்கள்; வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.