வீரகெட்டியவில் குழு மோதல் இளைஞர் ஒருவர் பலி

 


தென் பகுதியிலுள்ள வீரகெட்டியவில் இரண்டு குழுக்களிடையே நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் 17 வயதான இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஐந்துபேர் படுகாயமடைந்திருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றார்கள். மோதலுக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.

சம்பவ இடத்தில் பொலிஸார் சென்று அமைதியை நிலைநாட்டியுள்ளனர். விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.