போக்கு வரத்து பாதிப்பு


(மண்டூர்சமி)
நேற்று மாலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் காற்றுடனான கன மழையினால் மக்களின் போக்கு வரத்து மற்றும் நெற்காணிகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.


வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதியில் உள்ள மதகினூடாக வெள்ள நீர் ஊடறுத்து செல்வதனால் மக்களின் போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் கனகரக வாகனங்கள் மாத்திரம் பாதுகாப்பாக செல்வது குறிப்பிடதக்கது.மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் வெல்லாவெளி பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


அத்தோடு சற்று நாட்களுக்கு முன்பாக செய்கை பண்ணப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெற்காணிகள் வெள்ள நீரினால் மூழ்கப்பட்டுள்ளது.இதனால் நெற்காணிகளை மீள்செய்கை பண்ண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 


Advertisement