காட்டு யானை தாக்கியதில்

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


காட்டு யானை தாக்கியதில்  நெல் களஞ்சியம் உட்பட தோட்டப்பயிர்கள் சேதமடைந்துள்ளன.


அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட காரைதீவில் வெள்ளிக்கிழமை(30) இரவு  இச்சம்பவம் இடம்பெற்றது.

இச்சம்பவத்தில்  விவசாய நடவடிக்கையின் போது பயிரிடப்பட்டிருந்த வீட்டுத்தோட்டம் உட்பட நெற்களஞ்சிய அறை என்பன சேதமாக்கப்பட்டதுடன் உரப்பையில் பாதுகாப்பாக கட்டப்பட்ட நெல் மூடைகள் சேதமாக்கப்பட்டிருந்தன.

சுமார் 3 தொடக்கம் 5 வரையான யானைகள் கடும் மழைக்கும் மத்தியில் ஊருக்குள் உட்புகுந்து தாக்குதலை நடத்திவிட்டு சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.

 இதே வேளை அப்பகுதியில் உள்ள சீமேந்து மதில்களையும் சேதமாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement