நற்பிட்டிமுனை மாணவி அப்துல் மஜீத் ஹிக்மா 172 புள்ளிகளைப் பெற்று சித்தி

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


2020 ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் பாடசாலை மாணவி அப்துல் மஜீத் ஹிக்மா 172 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

இவர் நற்பிட்டிமுனையில் வசித்து வரும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். அப்துல் மஜீத் - சித்தி அனிஸா தம்பதியினரின் புதல்வியாவார். ஓய்வு பெற்ற அதிபரும் முன்னாள் கல்முனை பிரதேச சபையின் உறுப்பினருமான ஏ. அப்துல் கபூர் அவர்களின் பேத்தியுமாவார்.

இது தவிர அதி கூடிய மாணவர்களை சித்தி பெற வைத்துள்ள பாடசாலையாக கல்முனை தமிழ் கோட்டத்திலுள்ள  கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை காணப்படுவதுடன் இப்பாடசாலையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் 87 மாணவர்கள்  சித்தி பெற்றுள்ளனர்.

--


Advertisement