அக்கரைப்பற்று மீன் சந்தையை அண்டிய பகுதி தனிமைப் படுத்தலில்

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


அம்பாறை மாவட்டம்  அக்கரைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனோ தொற்று இன்று  உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால்  அக்கரைப்பற்று சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்கள் இன்று வியாழக்கிழமையில் (26) இருந்து மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என  கிழக்கு மாகாண சுகாதரா பணிப்பாள் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்திலுள்ள மீன் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்ட 20 பேருக்கு நேற்று புதன்கிழமை (25) எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பிரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

இதனையடுத்து அவர்களை உடனடியாக கொரோனா தொற்றுக்காக  சிகிச்யைளிக்கப்படும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதுடன் அந்த சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்கள் இன்றில் இருந்து மறு அறிவித்தல் வரும்வரை உரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்


Advertisement