நீர்கொழும்பு,சிறைச்சாலையில் கைதிகள் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம்


(சாஜஹான்) 

நீர்கொழம்பு சிறைச்சாலையில் கைதிகள்  17 பேர் சிறைச்சாலை கூரை மீது ஏறி  ஆர்ப்பாட்டம்

தம்மை பிணையில் விடுதலை செய்யுமாறு வற்புறுத்தி நீர்கொழம்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிறைச்சாலை கூரை மீது ஏறி நின்று இன்று (27)  முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

17 கைதிகள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவு தொடர்பாக தமக்கு திருப்தி இல்லை எனவும், தண்ணீர்ப்  பிரச்சினை தொடர்பாகவும் தெரிவித்து. தம்மை பிணையில் விடுதலை செய்யுமாறு அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.Advertisement