கண்டி நிலநடுக்கம், வெளியான உண்மைத் தகவல்



கண்டி திகன பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை பகல் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

புவிச்சரிதவியல் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று இன்றைய தினம் கண்டி திகன பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்கள் செறிந்துவாழும் அம்பாக்கோட்டை பிரதேசத்திற்கு விரைந்தனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி தொடக்கம் இதுவரை 7 நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

இதுகுறித்து ஆய்வுசெய்வதற்காக மேற்படி குழு இன்று விஜயம் செய்தது.

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஒருசில வீடுகள் அருகே நிலநடுக்கத்தை உணர்கின்ற கருவிகளை வைத்து சுண்ணாம்புக்கல் அகழ்வு செய்யப்படும் இடத்தில் வெடிப்புக்களை நிகழ்த்தி அதனை பதிவுசெய்துள்ளனர்.

எனினும் நிலநடுக்கத்தின்போது சந்தேகிக்கப்பட்ட சுண்ணாம்புக்கல் அகழ்வு வெடிப்பு இன்று இயந்திரத்தில் பதிவாகவில்லை.