மண்சரிவு அபாயம் (க.கிஷாந்தன்)

 

நுவரெலியா மாவட்ட நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் பெய்து வரும் மழையினால் கந்தபளை தோட்டம் கொன்கோடியா மத்திய பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக 7 குடும்பங்களை சேர்ந்த 33 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

 

குறித்த 33 பேர் வெளியேற்றப்பட்டு, கொன்கோடியா தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

இவர்களுக்கான உலர் உணவு பொருட்கள் நுவரெலியா பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

 

அதேபோன்று, இந்த பகுதி மக்கள் கடந்த 10 வருட காலங்களாக மண்சரிவு அபாயத்திற்கு உள்ளாக்கியிருந்த போதிலும், மழை காலங்களில் மாத்திரம் முகாம்களுக்கு செல்வதும், பின்பு காலநிலை வழமைக்கு திரும்பிய பின் வீடுகளுக்கு செல்வதுமாகவே வழமையாக கொண்டு வந்துள்ளனர்.

 

எனவே பாதிக்கப்பட்ட தங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பாதிக்கப்பட்ட இவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.