கையளிப்பு


 


வி.சுகிர்தகுமார் 0777113659  


  கடந்த தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்ட ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு வழங்கும் முகமாக  மக்களைப்பாதுகாப்போம் அமைப்பினரால் சேகரிக்கப்பட்ட ஒரு தொகை உலர் உணவுப்பொருட்கள் இன்று ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலனிடம் கையளிக்கப்பட்டது.
அமைப்பின் தலைமை அதிகாரி ந.விஸ்ணுகாந்தன் மற்றும் உறுப்பினர் இலட்சுமிகாந்த் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைப்பின் தலைமை அதிகாரி ந.விஸ்ணுகாந்தன் மட்டக்களப்பு மக்களாலும் மற்றும் வெளி இடங்களில் வாழும் மக்களாலும் வழங்கி வைக்கப்பட்ட பொருட்களே இன்று மக்களைப்பாதுகாப்போம் அமைப்பினரால் கையளிக்கப்பட்டது. அந்த வகையில் அம்மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
இனிவரும் காலங்களில் கொரோனா தொற்று பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தும் என நாம் நினைக்கின்றோம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் மக்கள் உணவுத்தட்டுப்பாட்டை எதிர்கொள்ள நேரிடும் எனவும் இச்சந்தர்ப்பத்தில் தங்களால் முடிந்தளவு முயற்சியினை செய்து மக்களுக்கு உதவி செய்ய தயாராகவிருப்பதாகவும் அவர் கூறினார்.