சமத்துவம் ஏற்படுத்தப்பட வேண்டும்


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


நாட்டில் சிங்களவர்கள் மாத்திரம் வாழவில்லை. தமிழ், முஸ்லிம், பறங்கியர்களும் இருக்கின்றனர். எனவே எல்லோருக்கும் பொதுவான ஒரு ஆட்சியை செய்யுங்கள் என்று விநயமாக கேட்டு கொள்கின்றோம். சகல மக்களையும் சமத்துவமாக மதியுங்கள் என  தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் தெரிவித்தார்.

  அம்பாறை ஊடக அமையத்தில்  திங்கட்கிழமை(28)  ஊடகவியலாளர்களை சந்தித்து சம கால அரசியல் நடப்புகள் தொடர்பாக பேசியபோது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது

புராதன இடங்களை அடையாளம் கண்டு அந்த இடங்களில் எந்தவொரு பொருள் காணப்பட்டாலும் அதற்கு பௌத்த முலாம் பூசுகின்ற வேலை திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தமிழ் பௌத்தர்கள் ஒரு காலத்தில் வாழ்ந்தனர் என்கிற ஊகம்இ உண்மை நிலவுகின்றது. இந்நிலையில் ஏதேனும் இடிபாடுகள்இ அடையாளங்கள் கண்டு கொள்ளப்படுகின்றபோது அதை சிங்கள பௌத்தத்துக்கு உரியது என்று நிலைநாட்ட முற்படுகின்ற மனோநிலையில் பிக்குகளும், இராணுவ அதிகாரிகளும் சல்லடை போட்டு தேடி கொண்டு இருக்கின்றனர். கொரோனாவுக்கு மருந்து முக்கியமா? அல்லது புதைந்து கிடக்கின்ற அடையாள சின்னங்களை வைத்து கொண்டு பேரினவாதத்துக்கு விருந்து வைப்பது முக்கியமா? என நான் வினவுகின்றேன்.

எல்லா நாடுகளும் முற்போக்கு பாதையில் முன்னோக்கி பயணிக்க விரும்புகின்றன. ஏனோ தெரியவில்லை எமது நாட்டு ஆட்சியாளர்கள் பிற்போக்கு பாதையில் பின்னோக்கி பயணிக்கவே விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக பண்டாரநாயக்க 1956 ஆம் ஆண்டு கொண்டு வந்த தனி சிங்கள சட்டத்தை கொண்டு வந்து இது ஒரு சிங்கள நாடு என்று காண்பிப்பதற்கு முயன்றதை நோக்கியும்இ 1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க இது ஒரு பௌத்த நாடு என்று புதிய யாப்பை கொண்டு வந்து நிறுவ முற்பட்டதை நோக்கியும் ஆட்சியாளர்கள் பின்னோக்கி இன்றைய ஆட்சியாளர்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றனர். இது பல்லின மக்கள் வாழ்கின்ற இந்நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை சிதைக்கின்ற நடவடிக்கையாகும். தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த முடியாத நிலைமை நீடிக்கின்றது.

ஆள்கின்ற இனம், ஆளப்படுகின்ற இனம்,அடக்குகின்ற இனம், அடக்கப்படுகின்ற இனம் என்று மக்களை பிரித்து பார்க்கின்றனர். புரட்சிகள் ஏற்படுவதற்கான அடிப்படை காரணம் சமத்துவமின்மையே ஆகும். எனவே சமத்துவமான நிலைமை உருவாக்கப்பட வேண்டும். மொழி, மதம், அபிவிருத்தி,தொழில் வாய்ப்பு ஆகியவற்றில் சமத்துவம் ஏற்படுத்தப்பட வேண்டும். நிலங்களை கையாள்வதிலும் சமத்துவம் வேண்டும். இவ்விதமான சமத்துவங்கள் உருவாக்கப்பட வேண்டியது முக்கியமான தேவையாக உள்ளபோது  அதை விடுத்து பாரபட்சம்இ பக்க சார்புஇ ஓர வஞ்சகமாக செயற்படுகின்றபோது இந்நாட்டில் புரையோடி போயுள்ள இன பிரச்சினை இன்னமும் விஷ்வரூபம் எடுத்து விடும்.

இந்த நாட்டில் சிங்களவர்கள் மாத்திரம் வாழவில்லை. தமிழ்இ முஸ்லிம்இ பறங்கியர்களும் இருக்கின்றனர். எனவே எல்லோருக்கும் பொதுவான ஒரு ஆட்சியை செய்யுங்கள் என்று விநயமாக கேட்டு கொள்கின்றோம். சகல மக்களையும் சமத்துவமாக மதியுங்கள். இன பிரச்சினைக்கு உள்நாட்டு பொறிமுறை மூலமாக தீர்வு கண்டு தாருங்கள். ஐந்து தடவைகளுக்கு ஒரு தடவை ஆட்சி வரும்இ பின்னர் அகன்று விடும். ஆனால் இன பிரச்சினைக்கான தீர்வுதான் இல்லாமல் போய் கொண்டு இருக்கின்றது. அரசாங்கம் இவற்றை கருத்தில் கொண்டு கவனமாக செயற்பட வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன் என்றார்.

--

Thanks & Best Regards,

FAROOK SIHAN(SSHASSAN)-Journalist-මාධ්‍යවේදී
B. F .A (Hons)Diploma-in-journalism(University ofJaffna)
பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
0779008012-(URGENT)
sihanfarook@yahoo.com, sihanfarook@gmail.com,sihanfarook@hotmail.com
0719219055,0712320725,0754548445