மரம் நடும் நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபே ராஜபக்ஷ மற்றும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் வழிகாட்டல் மூலம் நாடு பூராகவும் 10 இலட்சம் மரம் நடும் 'பிரஜா ஹரித்த அபிமானி 2020' நிகழ்வு இடம்பெற்றுவருகின்றது.

இதற்கமைவாக மற்றும் நீர்வழங்கல் அமைச்சரினதும் திட்டத்தில் தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் 'பிரஜா ஹரித்த அபிமானி 2020' திட்டத்திற்கு அமைவாக மரம் நடும் நிகழ்வு நேற்று அம்பாறை மாவடடத்தில் கோமாரி களுகொல்லை பிரதேசத்திலும்; ஆரம்பித்து வைக்கப்பட்டது..
நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன்,  பொத்துவில் பிரதேச கௌரவ தவிசாளர் எம்.எஸ்.  அப்துல் பாசித், உதவி பிரதேச செயலாளர் ராசிட், பிரதேச சபை உறுப்பினர் சுபோதரன், தேசிய சமூக நீர் வளங்கள் திணைக்கள மாவட்ட நிலைய பொறுப்பதிகாரி எம்.எல்.முஸாபிர்,  நீர்வழங்கல் அதிகார சபை (Nறுளுனுடீ)பொறியியலாளர்கள் , கிராம அபிவிருத்தி சங்கங்கள்,  உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சமய நிகழ்வுகளின் பின்னர் கலந்து கொண்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன்,  பொத்துவில் பிரதேச கௌரவ தவிசாளர் எம்.எஸ்.  அப்துல் பாசித் உள்ளிட்டவ்hகளால் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் பின்னர் மரக்கன்றுகளையும் அவர்கள் நாட்டி வைத்தனர்.