திருகோணமலையில் இரு பகுதிகள் Lockdown திருகோணமலை மாவட்டத்தின் அபயபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் ஜின்னா நகர் ஆகிய பகுதிகள் இன்று (24) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


கடந்த 02 நாட்களாக குறித்த பகுதிகளில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இரு பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.