உலகளாவிய கொரோனா தொற்றுக்கள் 10 கோடியைத் தாண்டியது!

 


ஜனவரி 25 ஆம் திகதி திங்கட்கிழமையுடன் உலகளாவிய கொரோனா தொற்றுக்கள் 10 கோடியைத் தாண்டியுள்ளன.

முன்னதாக ஜனவரி 9 ஆம் திகதி 9 கோடியையும், டிசம்பர் 25 ஆம் திகதி 8 கோடியையும் எட்டியிருந்தன. எனவே கொரோனா தொற்றுக்கள் 8 கோடியில் இருந்து 9 கோடியை எட்ட 15 நாட்களும், 9 கோடியில் இருந்து 10 கோடியை எட்ட 16 நாட்களும் எடுத்துள்ளன.

இன்றைய நிலவரப்படி நாடளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளி விபரம் இக்கட்டுரையின் கீழே தரப்படுகின்றது. நெதர்லாந்தில் கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. அங்கு பெப்ரவரி 10 ஆம் திகதி வரை கடுமையான கட்டுப்பாடுகள் அமுலாக்கப் பட்டுள்ளன.Advertisement