நிகழ்வுகள்

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அணுசரனை மற்றும் வழிகாட்டலின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலகம் நடாத்தும் இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்குதலும் நாவிதன்வெளி இலக்கியம் நூல் வெளியீடும் இன்று(18) நடைபெற்றது.

நாவிதன்வெளி கலாச்சார மத்திய நிலையத்தில் இந்நிகழ்வு பிரதேச செயலாளர்   எஸ்.ரங்கநாதன் வழிநடத்தலில்    மங்கள விளக்கேற்றுதலுடன் ஆரம்பமாகியது.

இதன் போது இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட  மேலதிக மாவட்ட செயலாளர்  வி. ஜெகதீசன்  பிரதம விருந்தினராகவும்   உதவிப் பிரதேச செயலாளர்  என் நவனீதராஜா , நிருவாக சேவை உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன், நிருவாக கிராம உத்தியோகத்தர் கே.பி.மனோஜ் இந்திரஜித், மாவட்ட கலாசார உத்தியோகத்தர்   ரி.எம்.றிம்சான் ,ஆகியோர் ஏனைய அதிதிகளாக கலந்து கொண்டனர்.

  பொதுவான இறைவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில்  வரவேற்புரையை  நாவிதன்வெளி பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்  ஏ.எல்.எம்.ஸினாஸ்  மேற்கொண்டார்.

 தொடர்ந்து  தலைமையுரையினை  பிரதேச செயலாளர்   எஸ் .ரங்கநாதன் நிகழ்த்தினார்.தொடர்ந்து  நாவிதன்வெளி இலக்கியம் ' நூல் வெளியீட்டுரையினை  கலைஞர் வி.ஜீவராசா  உரையாற்றினார்.

அடுத்து  நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றதுடன்    கலைஞர்கள்  பிரதம அதிதி உள்ளிட்ட ஏனைய அதிதிகளால் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும்  பிரதேச மட்ட இலக்கிய போட்டித் தொடரில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதும் மற்றும் பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டன.Advertisement