அக்கரைப்பற்று நெடுந்தோட்டத்தில் ரி 56 ரக துப்பாக்கி மீட்பு

 


வி.சுகிர்தகுமார் 0777113659  

  அக்கரைப்பற்று கண்ணகிபுரம் நெடுந்தோட்டம் வயல் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்த ரி 56 ரக துப்பாக்கி ஒன்றை இன்று பிற்பகல் மீட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அக்கரைப்பற ;று பொலிசார்,கண்ணகிபுரம் இராணுவத்தினர்,அம்பாறை தடயவியல் பொலிசார் சம்பவ இடத்துக்கு இன்று பிற்பகல் மணியளவில் சென்று துப்பாக்கியை மீட்டனர்.

மீட்க்கப்பட்ட துப்பாக்கி மிக நீண்டநாட்களாக நிலத்தில் கிடந்து துருப்பிடித்த நிலையில் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக துப்பாக்கி மீட்க்கப்பட்ட வயல் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட ;டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர். Advertisement