வாச்சிக்குடா விஸ்வகுல வீதி 58 இலட்சம் ரூபா ஒதுக்கீட்டில் புனரமைப்பு

 


வி.சுகிர்தகுமார் 0777113659    


 அரசாங்கம் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பல்வேறு கருத்திட்டங்களினூடாகவும் துரிதமாக முன்னெடுத்து வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக உள்ளுராட்சி அபிவிருத்தி உதவித்திட்டத்தினூடாக கிராமங்களில் உள்ள வீதிகளையும் அமைத்து மக்களின் போக்குவரத்து வசதிகளை இலகுபடுத்தி வருகின்றது.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட பல வீதிகளும் கொங்றீட் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

பிரதேச சபையின் தவிசாளர் த.கிரோஜாதரனின் முயற்சியின் பயனாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக வாச்சிக்குடா பிரிவின் விஸ்வகுல வீதி 58 இலட்சம் ரூபா ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்படுவதுடன் வடிகான் அமைத்தலும் இடம்பெறவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு தவிசாளர் தலைமையில் இன்று இடம்பெற்றதுடன் சபையின் உறுப்பினர்கள் நவனீதராஜா முகில்வண்ணன் சரணியா மற்றும் செயலாளர் ஆர்.சுரேஸ்ராம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு திட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர்.Advertisement