"கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது"


 


“எமது கடற்பரப்பில் உள்ள வழங்களை அழிக்கவும், எமது கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதையும் என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.” என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

டக்ளஸ் தேவானந்தா மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “எமது கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்கள் தமது கடற்பரப்பிலள்ள வளங்களை முற்றாக அழித்தொழித்த பின்னர் எமது கடற்பரப்பிற்கள் உள்நுழைந்து சட்டவிரோதமானதும் அத்துமீறியதும் தடைசெய்யப்பட்டதுமான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன