சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை புனர் நிர்மானம்


 வி.சுகிர்தகுமார் 0777113659 

  ஆலையடிவேம்பு பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை இன்று புனர் நிர்மானம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

சுவாழி விவேகானந்தரின் ஜனனதின நிகழ்வுகளுக்கு இணைவாக இப்பணி முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த உருவச்சிலையினை புனருத்தானம் செய்ய வேண்டும் என தவிசாளர் த.கிரோஜாதரனிடம் கோரிக்கை முன்வைத்த நிலையில் தவிசாளரின் தலைமையில் இப்புணருத்தான பணி முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் புனருத்தானம் செய்யப்பட்ட சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்;பட்டது.

சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலைக்கு முன்பாக மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் விசேட பூஜை மற்றும் பிரார்த்தனை இடம்பெற்றதுடன் தவிசாளர் த.கிரோஜாதரன் நாடாவை வெட்டி உருவச்சிலையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து சபை உறுப்பினர்கள் இணைந்து சுவாமியின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

நிகழ்வுகளில் சபையின் செயலாளர் மற்றும் உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Advertisement