அறிமுக நிகழ்வு

 வி.சுகிர்தகுமார் 0777113659 


 தேசிய மொழிகள் சகவாழ்வு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழான ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சகவாழ்வுக்கு சங்கங்களுடனான திட்ட அறிமுக நிகழ்வு இன்று பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.


அம்பாரை மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையம் தேசிய மொழிகள் நிதியத்தின் நிதி அனுசரணையுடன் அம்பாரை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு, சம்மாந்துறை, அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மொழியுரிமை மேம்பாடு மற்றும் 2ம் மொழிக்கற்கையினை விருத்தி செய்தல் எனும் பிரதான செயற்பாடுகளை மையப்படுத்தி மொழிகள் சகவாழ்வுச் சங்கங்களை ஒருங்கிணைத்து தேசிய மொழிகள் சகவாழ்வு மேம்பாட்டு திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைவாக அம்பாரை மாவட்ட அரசசார்பற்ற அமைப்பின் தவிசாளர் திரு.வ.பரமசிங்கம் தலைமையில் பிரதேச செயலாளர் வி.பபாகரனி;ன் நெறிப்படுத்தலுடன், உதவி பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் மற்றும் நிருவாக உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சகவாழ்வுச்சங்க உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
2020 ஜூலையில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டமானது கொரோனா அசாதாரண நிலை காரணமாக தடைப்பட்டிருந்தாலும் தற்போதைய சுமூக நிலையினை கவனத்திற்கொண்டு இத்திட்டம் தொடர்பிலான ஆலையடிவேம்பு பிரிதேசத்திற்கான அறிமுகக்கலந்துரையாடல் சகவாழ்வுச் சங்க உறுப்பினர்களை உள்ளீர்த்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன்போது இணையத்தின் தவிசாளர் .வ.பரமசிங்கம்; இணையம் தொடர்பிலான அறிமுகவுரையினை நிகழ்த்தியதுடன், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ஆர்.சுவாகர்; சிறப்புரை வழங்கினார்.
 அதனைத்தொடர்ந்து இணையத்தின் சார்பில் ஜனாப்.எம்.ஐ.நௌசாத் மேற்படி தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுத்திட்டம் தொடர்பிலான திட்ட விளக்கத்தினையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.


Advertisement