தைப்பூச திருவிழா



 வி.சுகிர்தகுமார் 0777113659  

  உலகிலே நீரும் அதிலிருந்து உலகமும் தோன்றி நாளாகவும் இரணியவர்மன் மன்னன் சிதம்பரத்தில் நடராஜப்பெருமானை நேருக்கு நேர் தரிசிக்கும் பாக்கியம் பெற்ற நாளாகவும் சிதம்பரத்தில் நடராஜர் உமாதேவியுடன் ஆனந்த தாண்டவம் ஆடி பக்தர்களுக்கு காட்சி கொடுத்த நாளாகவும் முருகப்பெருமான் வள்ளியை மணம் புரிந்த நாளாகவும் இன்னும் பல அதிசயங்கள் நிகழந்த நாளாகவும் கருதப்படும் தைப்பூச விசேட திருவிழா நேற்றிரவு பல ஆலங்களில் சிறப்பாக நடைபெற்றது.
இதேபோன்று; இந்த ஆண்டும் அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் கடந்த வாரம் கொடி ஏற்றத்துடன் தைப்பூசம் தொடங்கியது.
இதற்கமைவாக தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இலங்கையில் உள்ள முருகன் மற்றும் சிவன் விநாயகர் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கொவிட் 19 தாக்கம் நாட்டில் உள்ளபோதும் அதிலிருந்து மக்கள் மீள  வேண்டும் என பிராhத்தித்து அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன்; ஆலயத்தில் நேற்றிரவு இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்திருந்தனர்.
இதன்போது அக்கரைப்பற்று சத்தியசாயி நிலையத்தினரின் நாட்டிற்கு நன்மை வேண்டிய கூட்டுப்பிரார்த்தனை இடம்பெற்றது.
இதன் பின்னர் பிள்ளையாருக்கான பூஜையினை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை ஆரம்பமானதுடன் சுவாமியின் உள்வீதி உலாவும் இடம்பெற்றது.
இதன்போது உமாதேவியார் மற்றும் முருகப்பெருமான் போன்று அலங்காரம் செய்யப்பட்ட இரு பிள்ளைகள் ஊர்வலத்தின் முன்பே நடனம் ஆடி வந்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
ஆலய தலைவர் ஆர்.ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்ற திருவிழாவின் பூஜை வழிபாடுகளை சிவப்பிரம்மஸ்ரீ க.ஐ.யோகராசா குருக்கள் சிவப்பிரம்மஸ்ரீ தி.பரமலிங்கம் குருக்கள் மற்றும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கு.கணபதீஸ்வரக்குருக்கள் உள்ளிட்டவர்கள் நடாத்தி வைத்தனர்