சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி..!

 சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக, அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் வி.கே.சசிகலா எப்போது விடுதலை ஆவார் என்று சிறிது காலம் முன்பு நிலவிவந்த கேள்வி இப்போது அவர் எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என்பதாக மாறியுள்ளது.

ஜனவரி 27-ம் தேதி தனது தண்டனை முடிந்து அவர் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு அவர் பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இதுதொடர்பாக இன்று (ஜனவரி 21) 6 மணிக்கு மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், அவருக்கு தொடர்ந்து ஆண்டி வைரல் மற்றும் ஆண்டிபயாடிக் மருந்துகள் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Advertisement