#COVID19LKA உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 276





இலங்கையில் கொவிட் உயிரிழப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இறுதியாக இரண்டு கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்படி இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 276ஆக அதிகரித்துள்ளது.

பேலியகொட பகுதியைச் சேர்ந்த 71 வயதான பெண்ணொருவரும், அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஆண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்