வெள்ளிக்கிழமை முதல் கொரொனா தடுப்பூசிகளை வழங்கப்படும்

 


கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் கொழும்பின் ஆறு மருத்துவமனைகளில் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கவுள்ளதாக பொதுச்சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். 

கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை, ஹோமாஹம ஆதார வைத்தியசாலை, முல்லேரியா வைத்தியசாலை மற்றும் தொற்றுநோய் வைத்தியசாலை ஆகியவற்றில் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தவாரம் ஏனைய வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் என அவர் கூறியுள்ளார்.Advertisement