பனங்காட்டு பாலத்தின் கீழாக,சல்வீனியா தாவரங்கள் அகற்றப்படுகின்றன

 வி.சுகிர்தகுமார் 0777113659  

  அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காட்டு

பாலத்தின் கீழாக சூழ்ந்துள்ள சல்வீனியா தாவரத்தை அகற்றும் பணியை நீர்ப்பாசனத்திணைக்களத்தின் உதவியோடு ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்னெடுத்துள்ளது.


கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நிலையினை தவிர்ப்பதற்காக சின்னமுகத்தவாரம் ஏற்கனவே அகழ்ந்து விடப்பட்டுள்ளது.

இருப்பினும் பனங்காட்டு பாலத்தின் கீழாக சூழ்ந்துள்ள சல்வீனியா தாவரம் காரணமாக நீர் வடிந்தோடுவதில் தடை ஏற்பட்டது.

இந்நிலையினை கருத்திற்கொண்டே இப்பணி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் வி.பபாகரனின் வேண்டுகோளின் பிரகாரம் இடம்பெற்று வருகின்றது.

இதேநேரம் பனங்காட்டுப்பாலத்தின் கீழாக மாத்திரமன்றி தில்லையாற்றின் பெரும்பாலான பகுதிகள் சல்வீனியா தாவரத்தினால் சூழப்பட்டதன் காரணமாக மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் அகழ்ந்து விடப்பட்டதன் காரணத்தால் வெள்ளத்தால் சூழப்பட்ட பெரும்பாலான பிரதேசங்கள் மற்றும் வயல்நிலங்களில் தேங்கியிருந்த வெள்ளநீர் வடிந்தோடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.Advertisement