கழிவு தேயிலை தூளுடன் இரண்டு பேர் கைது


 (க.கிஷாந்தன்)

 

சுமார் 2500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தலவாக்கலை பொலிஸ் விசேட அதரடிபடையினரால் இவர்கள் 15.02.2021 அன்று மதியம் 12 மணியளவில் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

குறித்த கழிவு தேயிலை தூளை அனுமதி பத்திரம் இல்லாமல் கொட்டகலை பகுதியிலிருந்து கம்பளை பகுதிக்கு கொண்டு செல்லும் போது விசேட அதரடிபடையினரால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

 

அதன்பின் கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலை தூளையும், வாகனத்தையும், சந்தேக நபர்களையும் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

 

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரையும் அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக விசேட அதிரடிபடையினர் தெரிவித்தார்.

 

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.Advertisement