சுகாதார நடைமுறைகளுடன் சுதந்திரதின நிகழ்வு

 


இலங்கையின் 73வது சுதந்திர தின நிகழ்வுகள் - அம்பாரை நாடுபூராகவும் இன்றைய தினம் (4) நடைபெற்று வருகின்றன.


 அந்த வகையில் அம்பாரை மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில்இ திணைக்களத்தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க மதத்தலைவர்களின் ஆசியுரைகள் நடைபெற்று அரசாங்க அதிபரின் பிரதான உரையையடுத்து மாவட்ட செயலக வளாகத்தில் மர நடுகையும் நடைபெற்றது. 


Advertisement