பிறைந்துறைச்சேனையில் குழந்தை ஒன்று கிணற்றிலிருந்து சடலமாக


 


வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனையில் 04 வயது குழந்தை ஒன்று கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.


வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை காணாமல் போனதையடுத்து பெற்றோர் தேடியுள்ளனர். 

இதன்போது நேற்றிரவு வீட்டிற்கு முன்பாக உள்ள கிணற்றில் குழந்தை கிடந்ததை கண்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்ததன் பின்னர், அங்கு விரைந்த பொலிஸார் குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளனர்.


குழந்தை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் கூறினர்.


சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.