அம்பகமுவ மற்றும் கொத்மலை சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் டுப்பூசி ஏற்றும் பணி



 (க.கிஷாந்தன்)

நுவரெலியா – அம்பகமுவ சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட பகுதி மற்றும் கொத்மலை சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் வாழ்பவர்களுக்கான கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் பணி இன்று (10.06.2021) ஆரம்பமானது.  

அந்தவகையில், அம்பகமுவ சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள், பொலிஸார், தோட்ட அதிகாரிகள் மற்றும் தோட்ட முன்கள பணியாளர்கள் என 2850 பேருக்கு கினிகத்தேனை மத்திய கல்லூரியில் தடுப்பூசி ஏற்றப்பட்டது.

அத்தோடு, மற்றும் கொத்மலை சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள், பொலிஸார், தோட்ட அதிகாரிகள் மற்றும் தோட்ட முன்கள பணியாளர்கள் என 1066 பேருக்கு கொத்மலை பிரதேச செயலகத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்டது.

இந்த தடுப்பூசி ஏற்றும் பணியை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று (10.06.2021) நேரடி பயணம் மேற்கொண்டு கண்காணித்தார்.

இந்த கண்காணிப்பில் பிரஜாசக்தியின் பணிப்பாளரும், கொவிட் தடுப்பூசி செயலணியின் பிரதானியுமான பாரத் அருள்சாமி, மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர், நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர், இராணுவ அதிகாரிகள், ஆகியோர் கலந்து கொண்டார்கள்.