பொது நலவாய -adda- - என்கிற இணைய சஞ்சிகையில்'கவியுவன் சிறுகதை


 


வி.சுகிர்தகுமார் 0777113659  


  சர்வதேச மட்டத்தில் தன் பெயரை பதித்து நமது நாட்டிற்கும்
பிறந்த மண்ணிற்கும் புகுந்த மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார் பொறியியலாளர் ஆர்.யுவெந்திரா

திருக்கோவில் 'கவியுவன்' எனும் புனைப்பெயரில் வலம் வரும் யுவேந்திரா பல்துறைக்கலைஞன் என்பதை யாவரும் அறிவோம். அவர் பல சாதனைகளை நமது நாட்டினுள் நிலைநாட்டிய போதிலும் அதனையும் தாண்டி இன்று சர்வதேசத்திலும் தனது பெயரை பதிவு செய்து நமது நாட்டிற்கும் மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பொது நலவாய நாடுகள் அமைப்பினால் வெளிவிடப்படும்  -adda- என்கிற இணைய  சஞ்சிகையிலே இவ்வருடம் தென் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான 15 மொழிகளிலே தேர்ந்தெடுக்கப்பட்ட 32 படைப்புகள் ஆங்கில மொழிபெயர்ப்புடனும் மூல மொழியிலும் 4 இதழ்களில் வெளியாகி வருகின்றன.

இதில் மூன்றாவது இதழிலே சுமார் 28 வருடங்களுக்கு முன்னால் அவரால் எழுதப்பட்ட   ' வாழ்தல் என்பது ' என்னும் சிறுகதையும் வெளியாகியுள்ளது.

இவ்வருடத்தில் தமிழில் வெளியாகிய முதலாவது கதையாக அது அமைந்துள்ளது. இப்படைப்பினை வெளியிட்டமைக்காக இலங்கை நாணயப்படி சுமார் 42000 ரூபா அவருக்கும் சுமார் 70000 ரூபா இதனை மொழிபெயர்த்த கவிஞர் சோ.பத்மநாதன் அவர்களுக்கும் கிடைக்கப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

ஆயினும் அவருக்கு கிடைக்கப்பெற்ற பணத்தை கல்வி கற்கும் தேவையுடைய மாணவன் ஒருவரின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கியுள்ளார் என்பதே அவரின் பெருமனதை இங்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இந்நிலையில் கடந்த காலத்தில் இலங்கை நிருவாக சேவையினை அவர் தொட்டபோதிலும் கெட்ட காலத்தினால் வைநழுவ விட்டிருந்தார். ஆனாலும் தடைக்கல்லை எல்லாம் படிக்கற்களாக மாற்றி எவ்வளவுதான் தன்வாழ்வில் உயர்ந்தாலும் தான் நடந்து வந்த கல்லும் முள்ளும் நிறைந்த பாதையினை மறக்காத யுவன் போன்றவர்கள் நமது மண்ணில் வாழ்வதையிட்டு அக்கரை மண் பெருமை கொள்கின்றது.

மேலும் பொறியியல் துறையில் பட்டம் பெற்றாலும் தனக்கு விரும்பிய கற்பித்தல் துறையோடு விருப்புடன் செய்படும் இவரின் கற்பித்தலினால் இன்றும் பல மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.