கல்முனை AMH கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு 5 மில்லியன் பெறுமதியான பொருட்கள் கையளிப்பு(சர்ஜுன் லாபீர்)


கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் உள்ள கொரோனா அதிதீவிர சிகிச்சை நிலையத்திற்கு 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான அதி தீவிர சிகிச்சை நிலையத்திற்கான கட்டில்கள் மற்றும் அதற்கான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(13) கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்

எப் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. 


இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தார்.

மேலும் இந் நிகழ்வில் அஸ்ரப் ஞாபகார்த்த திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.இலாஹி,சிரோஸ்ட வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம் ஹாரிஸ்,நிதி உதவியாளர் எஸ்.எல். எம் லாபீர்,மருத்துவ வழங்குனர் எம் பாயிஸ் கான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.