ஜனாதிபதியின் கைகளை பலப்படுத்தி அபிவிருத்தியை முன்னெடுப்போம் பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)வரலாற்றில்  அபிவிருத்தி திட்டங்களை சிறப்பாக முன்னெடுக்கும் ஜனாதிபதியின் கரங்களை  நாங்கள் பலப்படுத்த வேண்டும்.எதிர்கட்சிகள் வீணாக விமர்சனங்களை கூறாமல் இணைந்து செயற்பட முன்வாருங்கள் என    ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை முக்கியஸ்தர்   அஹமட் புர்ஹான்  தெரிவித்தார்.

  ஜனாதிபதியின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் எதிர்வரும்  தேர்தலில் ஜனாதிபதி மீண்டும் போட்டியிடுவது தொடர்பில்    கல்முனையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் புதன்கிழமை(20) மாலை  நடாத்திய ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்


வரலாற்றில் என்றுமில்லாத சிறந்த ஒரு ஜனாதிபதியை நாங்கள் பெற்றிருக்கின்றோம். கடந்த காலங்களில்  நாட்டிலேயே குழப்பவாதிகளாலும்  ஆர்ப்பாட்டகாரர்களாலும்   பல பாரிய போராட்டங்கள் இடம்பெற்றன. அந்த போராட்டங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முகமாக ஜனாதிபதி அவர்கள் உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுப்பதற்காக கிராமிய மட்டத்தில் அபிவிருத்தி செய்வதற்காக பல  திட்டங்களை  அறிமுகப்படுத்தி இருக்கின்றார்.பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி இருக்கின்றார்.

 க.போ.த சாதாரண தர உயர்தர பரீட்சைகளிலே  குறைந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கான ஒரு ஒரு சிறந்த தொழில் வழிகாட்டி ஒன்றை ஏற்படுத்துவதற்காக ஒரு இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்புகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இது உண்மையிலேயே கடந்த காலங்களில் இருந்த ஜனாதிபதிகள் உடைய சிந்தனைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட ஒரு புதுவிதமான சிந்தனையாக நாங்கள் பார்க்கின்றோம். அதுமாத்திரமல்ல வறிய குடும்பங்களுக்கான ஒரு உண்மையான சிறந்த ஒரு இதை நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த காலங்களிலே பல்கலைக்கழக மாணவர்கள் கறுப்புக்கொடி போராட்டம் இன்று நாடு தழுவிய ரீதியில் மாதக்கணக்கில் அவர்கள் வீதிகளிலும் பாதையோரங்களிலும் அவர்கள் முகாமிட்டிருந்த எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாமல் அவர்கள் காலாகாலமாக கடந்த காலங்களில் அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் . மாத்திரமல்ல இதுவரைக்கும் எந்த விதமான உத்தரவாதமும் வழங்கப்படாத நிலையில் அவர்கள் தொடர்ந்து அவருடைய தொழில் வாய்ப்புக்காக பட்டதாரிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளார்.

மேலும் உண்மையில் எங்களுடைய சிறுபான்மை சமூகம்  ஜனாதிபதிக்கு வாக்களிக்காத நிலையில் பெரும்பாலான மக்கள் தமது தரப்பினருக்கு ஆதரவளித்து கூட அதை அவர்கள் எல்லா மக்களுக்குமான ஜனாதிபதி தான் என்கின்ற நிலைப்பாட்டில்  ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஷ   தொடர்ந்து செயலாற்றி சகல மக்கள் சமூக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.

  எனவே அவ்வாறான ஒரு வரலாற்று சிறப்புமிக்க செயற்திறன் மிக்க ஒரு ஜனாதிபதியை இலங்கை திருநாடு பெற்று இருக்கின்றது என்ற அடிப்படையில் தொடர்ந்தும் அவருடைய சேவை எங்களுடைய நாட்டுக்கு தேவை என்கின்ற அடிப்படையில் மக்கள்  அவருடைய கரங்களை பலப்படுத்துவதற்காக  மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலில் அவரை தெரிவு செய்வார்கள் என நம்புகின்றேன்.

எதிர்வரும் காலங்களில்  நிச்சயமாக   சகல செல்வாக்குடன் மக்கள் ஆணையை  பெற்று சுமார் 20 வருடங்களுக்கு மேலாக    எங்களுடைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்தும் நாட்டு மக்களுடைய நலன் கருதி சேவையாற்றுவதற்கு தயாராக இருக்கின்றது. அந்த அடிப்படையில் எதிர் வருகின்ற காலங்களில்   பெரும்பான்மை பலத்தோடு தொடர்ந்தும் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்ற அந்த செய்தியை கூறுவதில் நான் மிகவும் பெருமை அடைகின்றேன்.

 அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில்  அம்பாறை மாவட்டத்திலேயே கடந்த ஜனாதிபதித் அவர்களுடைய பெறுபேறுகளின் அடிப்படையிலே மிகப்பெரிய ஒரு பாரிய வித்தியாசம் ஒன்றை நாங்கள் பெற்றிருந்தோம். எதிர்வருகின்றமாகாண சபை  தேர்தலிலும் இவ்வெற்றியை  எதிர்பார்க்கின்றோம். ஏனென்றால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ  ஒரு சிறந்த நிர்வாகி ஆவார்.

எனவே தான் ஆளும் அரசாங்கத்தினுடைய கரங்களைப் பலப்படுத்தி எங்களுடைய சமூகத்தினுடைய இருப்பு அபிலாசைகள் பாதுகாப்பு என்பவற்றை உறுதி செய்ய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  சார்பில்  எதிர்வரும் மாகாண  சபை தேர்தலில்  அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை வெற்றி பெற  வைக்க வேண்டும் என்கின்ற ஒரு நிலைப்பாட்டை சிறுபான்மை சமூகம் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் குறிப்பாக வட கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் மக்களுடைய அரசியல் எண்ணப்பாடுகள் சமூகம் சார்ந்ததாக இனத்துவ ரீதியான அரசியல் கட்சி தலைவர்கள் உடைய பிரச்சாரம் சார்ந்ததாகதான் அமைந்து தவிர பொதுவாக நாட்டினுடைய அபிவிருத்தி அபிலாசை அதேபோன்று நாட்டின் ஸ்திரத் தன்மையை பாதுகாப்பு  பாதுகாப்பதற்கான எந்தவொரு சிந்தனையையும்  தலைவர்களின் இனவாத பேச்சுக்களின் மூலமாக மக்களை பிரித்தாளும் அரசியல் கட்சித் தலைவர்களால் சோரம் போகின்ற ஒரு நிலைப்பாடு கடந்த காலத்திலேயே அந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டது என்கின்ற ஒரு துரதிஷ்டவசமான ஒரு விடயம் இருக்கின்றது. தமிழ் முஸ்லிம் மக்களுடைய வாக்குகளை சர்வதேச மயப்படுத்தி வதற்கான அல்லது சர்வதேசத்தின் மத்தியில் மகிந்த ராஜபக்ச தரப்பினருக்கான எதிர்ப்பை வெளியிடுவதற்கான உறுதியாக இனவாத ரீதியான மத ரீதியான சிந்தனை  அடிப்படை வாத சிந்தனை உள்ள கட்சிகளிடையே தலைவர்களுடைய ஏற்பாடுகளுக்கு இந்த முஸ்லிம் தமிழ் சமூகம் பலியாகி இருக்கின்றது எனவே இவ்வாறான  சூழலில் சமூகத்தை தோற்கடித்து தலைவர்களும் தோற்று வருகின்ற கட்சியை நிச்சயமாக தமிழ் முஸ்லிம் மக்கள் விரும்பக் கூடாது   என மேலும்  குறிப்பிட்டார்