மருதமுனையும் விடுவிப்பு


 

#SarjunLafir.
கேகாலை, இரத்தினபுரி, அம்பாறை மற்றும் கண்டி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 10 பிரதேசங்கள் இன்று (17) காலை 6 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு கடந்த 03ம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்ட மருதமுனை-03 கிராம சேகவர் பிரிவு  தளர்த்தப்படுவதற்கு தேசிய கொரோனா தடுப்பு செயலணிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்  ஏ.ஆர்.எம் அஸ்மி தெரிவித்தார்.

மருதமுனை-03 கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்ட நிலைமை நாளை காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டாலும் தொடர்ந்தும் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இவ் உயர் மட்டக் கலந்துரையாடலில் கல்முனை பிரதேச செயலாளர்,பொலிஸ்,இராணுவ உயர் அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,மருதமுனை உலமா சபை பிரதிநிதிகள், மருதமுனை வர்த்தக சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்