ஆலையடிவேம்பில்்இரண்டாம் கட்டமாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று முதல் ஆலையடிவேம்பில் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார பதில் வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு இரண்டாம் கட்டமாக 5000 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நான்கு இடங்களில் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலை, அக்கரைப்பற்று இராமகிருஸ்ணமிசன் மகா வித்தியாலயம் கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உள்ளிட்ட நான்கு இடங்களில் தடுப்பூசிகள் ஏற்றப்படுவதாகவும் விரைந்து தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறும்; எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தடுப்பூசி ஏற்றப்படும் நடவடிக்கைகளில் வைத்தியர்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தாதியர்கள் குடும்பநல உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் கடமையாற்றி வரும் நிலையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்களை பதிவு செய்தல் மற்றும் ஒழங்குபடுத்தல் விழிப்பூட்டல் நடவடிக்கைக என பல்வேறு செயற்பாடுகளில் முற்றும் முழுதாக ஈடுபட்டு வருகின்றனர்.
 இதேநேரம் இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் உள்ளிட்;ட பிரதேச செயலக அதிகாரிகளும் தடுப்பூசி ஏற்றப்படும் நடவடிக்கையினை மேற்பார்வை செய்தனர்.
இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொரோனா தொற்று குறைவடைந்து வருதாக குறிப்பிட்ட  பிரதேச சுகாதார பதில் வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்  குறிப்பிட்டளவு தடுப்பூசிகளே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஆனாலும் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரிவுகளுகு;க 140000 ஆயிரம்; தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் இந்நடவடிக்கை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.