ஆலையடிவேம்பில் தென்னங்கன்றுகள் வழங்கி வைப்பு


 


வி.சுகிர்தகுமார் 0777113659 

  ஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கிய நாடு எனும் திட்டத்தின் கீழ் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக சமுர்த்தி மனைப்பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகளை கிராமங்கள் தோறும் வழங்கி தென்னை உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இன்று அம்பாரை மாவட்டம் முழுவதும் தென்னங்கன்றுகள் வழங்கும் பணி மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளிலும் இன்று இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் வழிகாட்டலில் தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் மற்றும் கருத்திட்ட முகாமையாளர் ரி.மதியழகன் ஆகியோரின் மேற்பார்வையில் இடம்பெற்ற தென்னங்கன்றுகள் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆலையடிவேம்பு தெற்கு மற்றும் வடக்கு வங்கியின் முகாமையாளர்களான கே.அசோக்குமார் எஸ்.சுரேஸ்காந்த் ஆகியோர் நெறிப்படுத்தினர்.

இதனடிப்படையில் ஆலையடிவேம்பு தெற்கு வங்கி மற்றும் வடக்கு வங்கியிலும் கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பராமரிப்பு முறைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன.