சங்கமான்கந்தைப் பகுதியில், காணமல் போன நபர், மரத்தில் தொங்கியபடி மீட்பு#இர்சாத்.

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட , தாண்டியடி  சங்கமான்கந்தைப் பகுியில் அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த, 21 வயது நிரம்பிய சௌந்தர்ராஜா விஸ்ணு குமார என்பவர் கடந்த 1ந் திகதி முதல் காணமல் போயுள்ளார். இன்றைய தினம் குறித்த கிராமப் பகுதியில் உள்ள வேப்ப மரத்தில், அவரது சடலம் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது. 

குறித்த சடலத்தை அவதானித்த பொது மக்கள் பொலிசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.அதனடிப்படையில் சங்கமான்கநத்தைப் பொலிசாரின் உதவியுடன் திருக்கோவில் பொலிசார் குறித்த இடத்துக்குச் சென்று விசாரணகளை மேற்கொண்டனர்.

வீடடில் ஏற்பட்ட தகராறினால், இந்தச் சம்பவம் இடம் பெற்றிக்கலாமஜ என அவரது தந்தை குறிப்பிட்டுளட்ளார்.


இது தொடர்பான மரண விசாரணைகளை, திடீர் மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி சசிராஜ் நடத்தினார்.