கஞ்சிகுடிச்சாறு பாவற்குளம் பகுதியில்,செயலிழந்த மோட்டர் எறிகணை கண்டெடுப்பு

இர்சாத். 

திருக்கோவில் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில், பாவற்குளம் பகுதியில், தனியார் காணியினை உழவும் போது அங்கிருந்து, சுமார் 6 அங்குல அகலமுள்ள சிறிய ரக மோட்டார் எறிகணைகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில், காணிச் சுவாந்தர், திருக்கோவில் பொலிசாருக்கு  தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியானது யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதுடன் அவர்கள் அக்காலப் பகுதியில் அந்த எறிகணையினைப் பயன்படுத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

திருக்கோவில் பொலிசார், இன்று உரிய இடத்திற்குச் சென்றதுடன், அதனைச் செயலிழக்கச் செய்யும் முகமாக, அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டளையினைப் பெற்று, அம்பாரையிலுள்ள விசேட அதிரடிப்படையினரின் அனுமதியினைக் கோரி இருப்தாகத் தெரியவருகின்றது.