புனித மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு கல்முனையில் மௌலித் மஜ்லிஸும் கொடியேற்றமும்


 


புனித மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு கல்முனையில் மௌலித் மஜ்லிஸும் கொடியேற்றமும்.


 (நூருல் ஹுதா உமர்.)


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினமான புனித மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு வருடா வருடம் கல்முனை தாருஸ்ஸபா அமையத்திலும், சாய்ந்தமருது சற்குரு மகாம் ஷாவியதுல் வாஹிதிய்யா வ ஹல்லாஜியாவிலும் நடைபெறும் மௌலித் மஜ்லிஸும் கொடியேற்றமும் இம்முறையும் கடந்த வியாழக்கிழமை (07) மாலை தாறுஸ்ஸபா அமையத்தின் தவிசாளர் உஸ்தாத் சபா முஹம்மத் தலைமையில் கல்முனையிலும், சாய்ந்தமருது சற்குரு மகாம் தலைவர் எம்.எம்.எ.ஜப்பார் தலைமையில் சாய்ந்தமருதிலும் நடைபெற்றது.


வழமையாக வெகுவிமர்சையாக நடைபெறும் இந்நிகழ்வு இம்முறை கொரோனோ தொற்று  காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட சிலருக்கு மாத்திரமே சுகாதார நடைமுறைகளை பேணி அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மௌலவிமார்களின் மௌலித் முழக்கத்துடன் நிகழ்வின் பிரதம அதிதி அஸ்ஸெய்யித் மக்கத்தார் அப்துல் மஜீத் கலீபத்துல் ஹல்லாஜ் அவர்களினால் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் சாய்ந்தமருது சற்குரு மகாம் செயலாளர் ஏ.சி.எம். நிஸார், உட்பட  நிர்வாகிகள், தாறுஸ்ஸபா அமையத்தின் முக்கியஸ்தர்கள், நிர்வாகிகள் என பலரும் சுகாதார நடைமுறைகளை பேணி கலந்து கொண்டனர்.