பாதுகாப்பு படையினரால் காரைதீவில் உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு


 


பாதுகாப்பு படையினரால் காரைதீவில் உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு 


மாளிகைக்காடு நிருபர் 


ஆர்மி தினத்தை முன்னிட்டு காரைதீவு பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு காரைதீவு 3ம் படை விஜய ரெஜிமென்ட் ஏற்பாட்டில் உலருணவு வழங்கும் நிகழ்வு காரைதீவு படைமுகாம் பொறுப்பதிகாரி லெப்டினன்ட் குமாராவின் தலைமையில் காரைதீவு படைமுகாமில் இன்று (10) இடம்பெற்றது. 


சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்க தலைவரும், முபாரக் குழும தலைவருமான எம்.எஸ்.எம். முபாரக்கின் அனுசரணையிலும் பங்குபற்றலுடனும் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பாதுகாப்பு படை காவலரன் பொறுப்பதிகாரி மேஜர் விஜயகோன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த  உலருணவு பொதிகளை வழங்கி வைத்தார்.