வின்சென்ட் மகளிர் பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி . பாக்கியராஜா காலமானார்


 


மட் / ஆரையம்பதியை பிறப்பிடமாகவும், Florida , USA வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரஞ்சோதி பாக்கியராஜா அவர்கள் 07.10.2021 வியாழக்கிழமை அன்று Florida இல் சிவபதம் அடைந்தார்.


இவர் மட்/வின்சென்ட் மகளிர் பாடசாலை முன்னாள் அதிபரும், மட்டக்களப்பு கல்வி திணைக்கள முன்னாள் இயக்குனரும் (Director of Education), கிங்ஸ்டன் சர்வதேச பாடசாலை, (கொழும்பு) முன்னாள் அதிபரும் ஆவார். 

அன்னார் காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி (முன்னாள் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வண்ணக்கர்), நேசம்மா அவர்களின் கனிஷ்ட புதல்வியும்

திரு..சுப்பிரமணியம் பாக்கியராஜா (முன்னாள் கல்வித்துறை ஆலோசகர், மட்டக்களப்பு ) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், லெட்சுமிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும் , கலைவாணி, செவ்வேள், சசிதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், முகுந்தன், மித்திரா, ஹிதயந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான - சிவநேசநாயகி, சுந்தரமூர்த்தி, தட்சணாமூர்த்தி,  அவர்களின் அன்பு சகோதரியும்,

விஷ்ணு, கிருஷ்ணா, லோகவாணி, பிரணவ், மகரிஷி, ஜனனி, அக்ஷாயினி ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.


இறுதிக்கிரிகை விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

 

பிறப்பு: 11.11.1931

இறப்பு: 07.10.2021


தகவல்,

குடும்பத்தினர்.