இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடி தீர்வுகளை வழங்குவதற்கு நிதியளிக்கும் ஒவ்வொரு நாட்டுடனும் பேச்சு நடத்த அமைச்சர்மாரை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கான வரி நீக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இந்த மாதம் முதல் ரூ.5000 கொடுப்பனவு ,ஓய்வூதியம் பெறுபவர்க்கு ஒரு வருட காலத்திற்கு ரூ.5000,சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிக கொடுப்பனவாக மாதாந்தம் ரூ 1,000 வழஙகத் தீர்மானம்.
பெருந்தோட்டத் துறை சார்ந்த குடும்பங்களுக்கு 1kg கோதுமை மா 80 ரூபா வீதம் நிவாரண விலையில் மாதாந்தம் 15kg வழங்கப்படும் என நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இதேவேளை 20 பேர்சர்ஸ்க்கு குறைவான விவசாய நிலங்களை கொண்டுள்ள விவசாயிகளுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment
Post a Comment