கௌரவிக்கும் நிகழ்வு



 


வி.சுகிர்தகுமார் 0777113659  

  ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் ஆலையடிவேம்பு தெற்கு வலயத்திற்குட்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளரை சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் இணைந்து கௌரவிக்கும் நிகழ்வு வங்கியின் ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

வங்கியின் முகாமையாளர் கே.அசோக்குமார் தலைமையில் வங்கியின் கட்டுப்பாட்டுச் சபை தலைவி க.கிருஸ்ணகுமாரி ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் மற்றும் கருத்திட்ட முகாமையாளர் ஆர்.மதியழகன் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவிகள் கலந்து கொண்டனர்.

கடந்த பல வருடங்களாக சமுர்த்தி திட்டத்தினை சிறப்பாக முன்கொண்டு சென்றமை மற்றும் பொதுமக்களுக்கான சேவையினை பெற்றுக்கொடுத்தமை சமுர்த்தி வங்கியின் முன்னேற்றத்திற்காக உழைத்தமை உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தியே இக்கௌரவிப்பு பொதுமக்கள் சார்பாக முன்னெடுக்கப்பட்டது.

கலந்து கொண்ட அதிதிகள் கட்டுப்பாட்டுச்சபை உறுப்பினர்களால் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டனர். பின்னர் அதிதிகள் மற்றும் உத்தியோகத்தர்களது உரை இடம்பெற்றதுடன் சங்கத்தலைவி ஒருவரால் வாழ்த்துப்பாடலும் வழங்கப்பட்டது.

நிறைவாக முகாமையாளர் உள்ளிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவிகளால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.