தம்பட்டை பிரதேசத்தில் விபத்தினை ஏற்படுத்திய சாரதி விளக்கமறியலில்



 வி.சுகிர்தகுமார் 0777113659   



  அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் தம்பட்டை எனும் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கியவரின் காலொன்று சிதைவடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனுமதிக்கப்பட்டவரின் காலொன்றின் முழங்காலுக்கு கீழான பகுதி அகற்றப்பட்ட நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் சிக்கியவர் தம்பட்டை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய செல்வராசா விஜயதாஸ் என தெரிய வருகின்றது.

மோட்டார் சைக்கிள் தனியார் பஸ் ஒன்றுடன் மோதியதனாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது,

விபத்தை ஏற்படுத்திய வாகன பஸ் சாரதி வாகனத்துடன் அக்கரைப்பற்று பொலிசில் சரண் அடைந்துள்ள நிலையில் அவரை திருக்கோவில் பொலிசாரிடம் அக்கரைப்பற்று பொலிசார் ஒப்படைத்துள்ளனர்.

இதேநேரம் விபத்தில் சிக்கியவரை தனியார் நிறுவனமொன்றின் வாகனத்தின் உதவியுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வாகன சாரதிகளின் கவலையீனமாக தற்காலத்தில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றமை கவலை அளிப்பதுடன் இது தொடர்பில் பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விக்கின்றனர்.

குறித்த சாரதி இன்று அக்கரைப்பற்று நீதிமன்றின் முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட வேளையில் இவரை இம் மாதம் 20 நத திகதி வரை விளக்கமறியலில் வைக்க அக்கரைப்பற்று நீதவான் கட்டளை பிறப்பித்தார்.