ஆலையடிவேம்பில்,சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு




வி.சுகிர்தகுமார் 0777113659  


  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இன்று சமையல் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது.
பிரதேச செயலக முன்வீதி அக்கரைப்பற்று 8 இல் உள்ள வீடொன்றிலேயே இவ்வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் உரிமையாளர் சமையலில் ஈடுபட்டிருந்தபோது தீடிரென சத்தமொன்று உருவானதாகவும் இதன் பின்னர் குறித்த அடுப்பின் மேற்புற கண்ணாடி உடைந்து செல்வதையும் அவதானித்ததாகவும் சமையலில் ஈடுபட்ட பெண் தெரிவித்தார்.
மஞ்சள் நிற லாவ்காஸி;னை பாவித்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்ற நிலையில் குறித்த காஸினையும் அடுப்பினையும் வீட்டில் உரிமையாளர்கள் வீட்டின் வெளிப்புறத்தே இழுத்து சென்றுள்ளதையும் அவதானிக்க முடிந்தது.
ஆயினும் இச்சம்பவத்தால் வேறு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. காண முடிந்தது.