(ST.Jamaldeen)
அக்கரைப்பற்றில் நீதிபதி ஒருவர் வீட்டில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புற்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட 2 பௌத்த மதகுரு உட்பட இன்னுமொரு சந்தேக நபரும், சந்தேக நபர் பயணஞ் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட வாடகை காரின் நடத்துனரையும் அக்கரைப்பற்று பொலிசார் இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
குறித்த சம்பவத்துடன் சம்மந்தப்பட்ட பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்படவேண்டி இருப்பதானலும், விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாலும் குறித்த சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்றுப் பொலிசார் இன்று நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.
ஏலவே, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 2 பௌத்த மதகுரு உட்பட இன்னுமொரு சந்தேக நபருக்கு விளக்மறியலில் வைப்பதற்கும், இதேவேளை வெட்டுவாய்க்கால் பகுதியில் கைப்பற்றப்பட்ட காரினை வாடகைக்கு விட்ட நபரும் இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜஜபடுத்தப்பட்டார்.
எதிர்வரும் 18 ந் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பறு நீதிவான் நீதமன்ற கௌரவ நீதிபதி எம். எம்.எம் ஹம்சா இன்று கட்டளை பிறப்பித்தார்.


Post a Comment
Post a Comment