வி.சுகிர்தகுமார் 0777113659
அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய சமுர்த்தி பயனாளிகளுக்கு இம்மாதம் முதல் அதிகரித்த நலனுதவி கொடுப்பனவு வழங்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பமானது.
தேசிய ரீதியில் 25 மாவட்டங்களிலும் 331 பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 14022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இத்திட்டம் இன்று காலை 10 மணிமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 22 கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் அதிகரித்த நலுனுதவி கொடுப்பனவு இன்று காலை முதல் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் ஆலோசனையின் பிரகாரம் கிராமங்கள் தோறும் இடம்பெற்ற அதிகரித்த நலனுதவி கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஆர்.மதியழகன் சமுர்த்தி முகாமையாளர்களான கே.அசோக்குமார் எஸ்.சுரேஸ்காந் உள்ளிட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அதிகரித்த முத்திரை கொடுப்பனவு வழங்கல், வலுவூட்டப்பட்ட சமுர்த்தி குடும்பத்திற்கான பொற்சான்றிதழ் வழங்கல், வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கான பழமரக்கன்றுகள் வழங்கல், சமுர்த்தி வங்கியினூடாக கடன்பெறுவது தொடர்பிலான ஆலோசனை வழங்கல், 2022 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள சமுர்த்தி திட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்தல் போன்ற செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

Post a Comment
Post a Comment