(காரைதீவு சகா)
சேதனவிவசாய நடைமுறைகளைப்பின்பற்
இவ்வாறு லாகுகலையில் நடைபெற்ற விவசாய விழாவில் உரையாற்றிய கிழக்குமாகாணவிவசாயஅமைச்சின்பு
கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட லாகுகலை வலயத்தின் சிறந்த விவசாயிகளுக்கான பரிசு வழங்கும் வைபவமும் அவர்களுக்கான உள்ளீடு வழங்கும் வைபவமும் அப்பிரதேச விவசாயபோதனாசிரியர் எஸ்.சித்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் புதிய செயலாளர் ஜ.ஜே.கே. முத்துபண்டா பிரதம அதிதியாகக்கலந்துகொண்டு சிறந்த விவசாயிகளுக்கான பரிசுகளை வழங்கிவைத்துரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு .அவர்களுக்கான விதை உள்ளீடுகளையும் வழங்கி வைத்தார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்:
விவசாயிகள் சேதனமுறைகளைக்கையாண்டு சிறந்த முறையில் உங்கள் உற்பத்திகளை மேலும் கூடுதலானளவு அதிகரிக்கவேண்டும்.விவசாயிகளின் உற்பத்திகளுக்கு சிறந்த விலையினைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.என்றார்.
இந்நிகழ்வில் கிழக்குமாகாண விவசாய பணிப்பாளர் கலாநிதி எஸ். எம்.ஹுசைன் ,அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் பி.திசாநாயக்க ,லாகுகலை பிரதேச உதவி விவசாய பணிப்பாளர் எஸ். பரமேஸ்வரன்,தலைமை விவசாய போதனாசிரியர் எ.வி.தஸ்லீம் மற்றும் விவசாய போதனாசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாயத்திணைக்களத்தினுடாக விவசாயிகளுக்கு கப் (GAP) சேதன வீட்டுத்தோட்டம் மற்றும் விதையுற்பத்தி திட்டங்களுக்கான உள்ளீடுகள் மற்றும் நிலக்கடலை விதைகள் வழங்கிவைக்கப்பட்டன..

Post a Comment
Post a Comment